கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் சாலைபாதுகாப்பு, மற்றும் தேசிய மாணவர்படை அமைப்பு சார்பாக சாலைபாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வி துறை சார்பாக பள்ளிகளில்” குட்டி காவலன்” என்ற அமைப்பை உரு வாக்கி விபத்தில்லா தமிழகம் உருவாகிட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகளில் குட்டி காவலன் அமைப்பு மக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையா சிரியை அமலோற்பவ மேரி,அருட்பணி. ஞான பிரகாசம், தேசிய மாணவர்படை மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்பு அலுவலர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.