Homeபிற செய்திகள்சன்பீஸ்ட்டின் புதிய அறிமுகம்

சன்பீஸ்ட்டின் புதிய அறிமுகம்

க்ரம் பிஸ்கட் செக்மென்ட்டில் மார்க்கெட் லீடரான சன்ஃபீஸ்ட் பவுன்ஸ், பவுன்ஸ் ஃபில்ஸ் எனும் தனது புதிய புராடெக்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. பவுன்ஸ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய புராடெக்ட், மில்க் க்ரம் சென்டர்-ஃபில்டு குக்கீ வகையை சேர்ந்தது.

இது, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய இரண்டு அற்புதமான சுவைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஃப்ரூட் ஃபிளேவர்ஸ் மற்றும் க்ரமின் சுவாரஸ்யமான கலவைகளை உருவாக்குவதே பவுன்ஸ்-இன் சிறப்பாகும்.

இந்த புதுமையான அறிமுகத்தின் மூலம், ஃப்ரூட் பிளேவர்டு சாண்ட்விச் க்ரமின் நுகர்வோர்களுடைய அனுபவத்தை மேம்படுத்த பவுன்ஸ் முயற்சிக்கிறது.

ஃப்ரூட் பிளேவர்டு சாண்ட்விச் க்ரம் செக்மென்ட்டில் நீண்டகாலமாக நுகர்வோரை உற்சாகப்படுத்தும் புதுமைகள் எதுவும் வெளிவரவில்லை.

சென்டர்-ஃபில்டு க்ரம் பிஸ்கட் வகைகளின் முன்னோடியான சன்ஃபீஸ்ட், இந்த இடைவெளியை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, தனது சன்ஃபீஸ்ட் பவுன்ஸ் ஃபில்ஸ் ப்ராடெக்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது மொறுமொறுப்பான பழச் சுவையுள்ள ஷெல்களில் உருகிய வடிவில் நிரப்பப்பட்ட க்ரமுடன் மேன்மை யான சுவை அனுபவத்தை தருகிறது.

இந்த அறிமுகம் குறித்து பேசிய ஐடிசி லிமிடெட், ஃபுட் டிவிஷன், பிஸ்கட், கேக்ஸ் கிளஸ்டர், சீஃப் ஆபரேட்டிங் ஆஃபிசர், அலி ஹாரிஸ் ஷேர், “எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பவுன்ஸ் ஃபில்ஸை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதில், சுவையான மில்க் க்ரம், பிரபலமான சென்டர்-ஃபில்டு ஃபார்மெட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதுமையான தயாரிப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஃப்ரூட் ஃபிளேவர்டு சாண்ட்விச் க்ரம் செக்மென்ட்டில், அதிக உற்சாகத்தையும் மேன்மையான சுவையையும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ள நாங்கள், குழந்தைகளுக்கு இனிமையான விருந்தையும் படைத்துள்ளோம்,’’ என்றார்.

புதிய சன்ஃபீஸ்ட் பவுன்ஸ் ஃபில்ஸ், 20 கிராம் எடையுடன் 2 குக்கீஸ்களை கொண்ட ஒரு பேக்கின் விலை ரூ.5 ஆகும்.

இது, நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். சன்ஃபீஸ்ட் பவுன்ஸ் ஃபில்ஸின் அறிமுகமானது 360 டிகிரி பிரசாரத்தின் மூலம் பிரபலப்படுத்தப்படும்.

படிக்க வேண்டும்

spot_img