fbpx
Homeபிற செய்திகள்‘கோ பார்’ பிரச்சாரம்: ஸ்பின்னி துவக்கம்

‘கோ பார்’ பிரச்சாரம்: ஸ்பின்னி துவக்கம்

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க, விற்க முன்னணி முழுமை யான தளமாக விளங்கும் ஸ்பின்னி, “கோ பார்” என்ற புதிய பிரசாரத்தை துவக்கியுள்ளது.

இதன் முதலீட்டாளரும் பிராண்ட் தூதுவராக உள்ள சச்சின் டெண்டுல்கர், இதில் பங்கேற்கிறார். பெரியதாக கனவு காண், அதை செயல்படுத்து என்ற தொடராக பிரபல திரைப்பட நட்சத்திரங்களும், இதில் உள்ளனர்.

பிரசாரத்தின்போது, பல்வேறு மக்கள் தங்களது எல்லை கடந்த அன்பையும், கனவையும், தங்களையும் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என் பதை ஆராயப்போகிறது. இந்த பயணத்தின் முதல்கட்டமாக முதல் கார் 800 ஐ சச்சின் ஓட்டுவதுதான்.

“சில ஆண்டுகளுக்கு முன்னாள் சச்சின் அவரது முதல் காரை கண்டுபிடித்து மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்தார்.

“எனது முதல் கார் 800, தற்போது அது என்னிடம் இல்லை. அந்த காரை மீண்டும் நான் பெற வேண்டும் என விரும்பினேன். என்னை தொடர்பு கொள்ள தயக்கம் வேண்டாம்“ என்றார் சச்சின்.

“கோ பார்” பிரசாரமானது, தனிப்பட்டது. உறவுகளை கொண் டது. பல்வேறு சிறப்பம்சம் கொண்ட மக்களை கொண்டது. புதிய காரையோ, வீட்டினையோ கொண்டாடுவது அல்லது வயதான தம்பதியர்களின்புறக்கணிக்கப்பட்ட நீண்ட நாள் கனவின் புறக்கணிப்பு போன்ற எல்லைகளை கடக்கச் செய்வது தான் இந்த பயணத்தின் நோக்கம்.

ஸ்பின்னி நிறுவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிராஜ் சிங் பேசுகையில், “வாழ்க்கை மற்றும் உங்களது வாய்ப்புகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்கள் வாங்க நினைக்கும் கார் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

இதில், சச்சின் டெண்டுல்கரும் அடக்கம். அவரது முதல் கார் அவரை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. அதை ஸ்பின்னி உருவாக்கிக் கொடுத்துள்ளது,” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “எனக்கு கார் என்பது ஒரு பயணத்துக்கான தேவை. இரண் டாவது வீடு போன்றது. என்னுடன் பயணிப்பவர்கள், வாழ்க்கைக்கும், இடங்களுக்கும் செல்பவர்கள்.

எங்களது கார் இதை பிரதிபலிக்கிறது. ஸ்பின்னி, காருக்கு பின்னணியில் உள்ள உணர்வுகளை மதிக்கிறது. நம்பிக்கையின் மதிப்பையும், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங் கிணைப்பை கொண்டது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img