fbpx
Homeபிற செய்திகள்கோவை ஹாஷ் 6 ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்ச்சி

கோவை ஹாஷ் 6 ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்ச்சி

கோவை சாயிபாபா காலனி அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹாஷ் 6 ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹாஷ் 6 ஓட்டல் தலைமை நிர்வாகி செப் ராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஹாஷ் 6 ஹோட்டல் துணைப் பொது மேலாளர் எம்.எஸ்.சாகுல் ஹமீத் செரீப் கூறியதாவது:

கிறிஸ்துமஸ் விழாவுக்காக கேக் கலவை கலக்கும் நிகழ்வு உலகம் எங்கும் பாரம்பரிய திருவிழாவாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவை இங்கு நடத்துவ தில் பெருமை அடைகிறோம்.

இந்த கேக் கலவை சுமார் 200 கிலோ எடை வரை கலக்கப்படும். இதை கிறிஸ் துமஸ் வரை காற்றுப் புகாத பைகளில் அடைத்து வைத்து கேக் தயாரிக்கப்படும் என்றார்.

மார்ட்டின் குரூப் கம்பெனிகளின் இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3201 சிறப்பு குழந்தைகள் நலம் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது:

இந்த கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் நிகழ்ச்சி மூன்றாவது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த கலவை கேக்குகள் அனைத்தும் காற்றுப் போகாத பைகளில் வைத்து பின்னர் தயாரிக்கப்படும் ஆயிரம் கிலோ கேக்குகள் வரை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ரோட்டரி ஆளுநர் ராஜ்மோகன் நாயர், மீரா நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img