ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறி யியல் கல்லூரி இறுதியாண்டு சிவில் இன்ஜினியரிங் துறை யைச் சேர்ந்தவர் சஜின் தாமஸ்.
இவருக்கு, 2021-ம் ஆண்டிற்கான சிறந்த என்சிசி இயக்குனர் ஜெனரல் கமெண்டேஷன் Director General NCC (DG NCC) விருது, கோவை சிங்காநல் லூரில் அமைந்துள்ள என்.சி.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப் பட்டது.
தேசிய மாணவர் படையில் பல்வேறு பிரிவில் சாதனை, சிறந்த சேவை, பிரதம மந்திரியின் பேரணி மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பு வழி நடத்தியதற்காக இந்த பிரைம் டைம் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் என்சிசி இயக்குனரகத்தில் சீனியர் டிவிஷன் ராணுவப் பிரிவில், மேற்கண்ட பதக்கத்தை பெற்ற ஒரே என்.சி.சி. மாணவர் தாமஸ் ஆவார்.
இந்த விருதினை கமெண்டிங் ஆபீசர் கலோனல் சந்திரசேகர், சுபேதார் குல்வந்த் சிங் ஆகி யோர் வழங்கினர்.
சஜின் தாமஸ் புரிந்த சாதனையை எஸ். என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட் சுமி நாராயணசாமி, துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் முனை வர் என்.ஆர். அலமேலு, துணை முதல்வர் முனைவர் ப.கருப்புசாமி, என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் முனைவர் மா.ரமேஷ் ஆகி யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.