கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் ரூ.76.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், டி.ராமச்சந்திரன், சி.வி.எம்.எழிலரசன், ஈ.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜ்குமார், அம்மன்.கே.அர்ச்சுணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர்.மோ.ஷர்மிளா, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் பெ.மாரிச்செல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.