fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலி

கோவை மாவட்டத்தில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் பேட்டரி சக்கர நாற்காலி

கோவை மாவட்டத்தில் 41 மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ரூ.40,99,918 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூன்று சக்கர சைக்கிள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஊன்றுகோல், கறுப்பு கண்ணாடி மற்றும் மடக்கு கோல்கள், காதொலிக்கருவி, பிரெய்லி கைக்கடிகாரம் உருப்பெருக்கி, பிரெய்லி ரீடர் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பால் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் செயலிழந்த 41 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ரூ.40,99,918 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இச்சக்கர நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக இடம்பெயர முடிகிறது.

பயமின்றி செல்ல உதவும் பேட்டரி சக்கர நாற்காலி
என் பெயர் சரவணக்குமார். கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன. என்னுடைய இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது.

எனவே, சாதாரண சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வந்தேன்.

ஆனால் சாலைகளில் சிறு, சிறு, மேடு பள்ளங்களில் சாதாரண சக்கர நாற்காலியில் செல்வது மிகச் சிரமமாக இருந்தது. எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் பேட்டரியால் இயங்கும் விலையில்லா சக்கர நாற்காலியினை பெற விண்ணப்பித்து இருந்தேன்.

அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக ரூ.1 இலட்சம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இச்சக்கர நாற்காலியின் மூலம் என்னால் அருகில் உள்ள இடங்களுக்கு தனியாக சிரமமின்றி, எவ்வித பயமுமின்றி சென்று வரமுடிகிறது.

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. அந்தவகையில், இந்த திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img