கோவை மாவட்டம், பொள் ளாச்சி வடக்கு வட்டாரம் ஆதியூர், கிணத்துக்கடவு வட்டாரம் எஸ். மேட்டுப்பாளையம், மதுக்கரை வட்டாரம் சீரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது: முதல்வர் விவசாயிகளின் நலனுக்காக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை துறையில் புதிய திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது அனைத்து கிரா மங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உரு வாக்கிட அனைத்து துறை களின் ஒருங்கிணைப்புடன் செயல் படுத்தப்பட்டு தன்நிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
இத்திட்டமானது வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுதுறை, வேளாண் விற் பனை மற்றும் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால் நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 2021&-2022 -ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட இக் கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புகூட்டி சந்தை படுத்துதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல், பாசன நீர் வழித்தடங்களை தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் தோட்ட கலைத்துறையால் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட தரிசு நில தோப்புகளை ஒரு வகையாகவும், குறைந்தபட்சம் 8 விவசாயிகளை உள்ளடக்கிய 15 முதல் 35 ஏக்கர் வரை பரப்பளவை கொண்ட தரிசு நில தோப்புகளை மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அன்னூர் வட்டாரத்தில் ஆம்போதி, அ.செங்கம்பள்ளி, அ.மேட்டுப் பாளையம், வடவள்ளி, பெரி யநாயக்கன்பாளையம் வட் டாரத்தில் நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு வட்ட ராத்தில் புரவிபாளையம் ஆகிய கிராமங்களில் தரிசு நில தோப்புகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
மேற்கண்ட தரிசு நில தோப்புகளை உழவர் ஆர்வலர் குழுக்களாக பதிவு செய்யப்பட்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைக் கப்பட்டு வருகின்றது.
மேலும், வேளாண்மைத்துறையின் மூலம் தார்பாலின் விநியோகம், நெற்பயிரில் உற்பத்தி திறனை அதிகரிக்க ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் விநியோகம், பனை மேம்பாட்டு இயக்கம், வேளாண் உபகரணங்கள் தொகுப்பு விநியோக திட்டம், தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரம் ஆதியூர், கிணத்துக் கடவு வட்டாரம் எஸ். மேட் டுப்பாளையம், மதுக்கரை வட் டாரம் சீரபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுக்கரை வட்டாரம், சீரபாளையம் கிராமத்தில் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட விசை களையெடுப்பான் கரு விகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் விசை களையெடுப்பான் கருவிகளை இயக்கி உழவர் உற்பத்தியாளர் குழுவிடம் அக் கருவிகளை பயன்படுத்தும் முறை அக்கருவிகளின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார்.
உழவர் உற்பத்தியா ளர் குழு உறுப்பினர்களி டம் மாவட்ட ஆட்சியர் கலந் துரையாடினார். கிணத்துக்கடவு வட்டாரம், எஸ்.மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத் திட்டத்தின் கீழ் மகாகனி மற்றும் வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்த விவசாயியின் வயலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நுண்ணீர் பாசன திட்டத்தில் பயனடைந்த விவசாயியின் வயல் மற்றும் துணைநிலை நீர்மேலாண்மை திட்டத்தில் பயனடைந்த விவசாயியின் தரைநிலை நீர்த் தேக்க தொட்டியினை ஆய்வு செய்து அதன் பயன்பாட்டினை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து அறிவுரைகள் வழங் கினார்.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் புரவிபாளையம் வருவாய் கிராமத்தின் கீழ் அமைந்துள்ள ஆதியூர் குக் கிராமத்தில் 25 விவசாயிகள் அடங்கிய 16.2 ஏக்கர் தரிசுநில தொகுப்பு அமைக்கப்பட்டு, உழவர் ஆர்வலர் குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைப் பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் இத்தொகுப்பினை ஆய்வு செய்து, இத்தொகுப்பில் உள்ள தரிசு நில விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினார்.
ஆய்வின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, துணை இயக்குநர்கள் அகமது, பெருமாள்சாமி, கிருஷ்ணவேணி, உதவி இயக்குநர் புனிதா, வட்டார வேளாண் அலுவலர்கள் ரத்தினம், ஆனந்தகுமார், மீனாம்பிகை, ஆத்மா திட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தலிங்கம் உட்பட அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.