கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், தி.மு.க தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டார்.
இதையொட்டி, தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆசியுடன் கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அவர் பேசும்போது, தி.மு.க தலைவர் தமிழக முதலமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஆசியுடன் இந்த பொறுப்பை ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதவாத சக்திகள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி தமிழகத்தில் வளர நினைக்கின்றது. அது ஒருகாலும் முடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றியடையும், என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் கல்பனா மற்றும் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.