fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி 1வது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி- கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் துவக்கிவைத்தார்

கோவை மாநகராட்சி 1வது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி- கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் துவக்கிவைத்தார்

கோவை மாநகராட்சி 1வது வார்டு துடியலூர், அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில், பொது மக்கள் பயண்பாட்டிற்காக புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பூமிபூஜை செய்து கவுன்சிலர் கற்ப கம் ராஜசேகரன் துவக்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி, 1-வது வார்டுக்குட்பட்ட, துடியலூர், வெள்ளக்கிணறு பகுதிகளில் அத்திக்கடவு 3-வது குடிநீர் விநி யோகத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்திட, அந்த வார்டு பகுதிகளில் ராட்சத குழாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.

1வது வார்டு கவுன்சிலர் மற்றும் பணிக்குழு உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த திட்டப்பணிகளை விரைவில் முடித்து பணிகளை பொதுமக்கள் பயண்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கற்பகம் ராஜசேகரன் கேட்டு கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img