கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பெரிய குளக்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டல தலைவர்கள் மீனாலோகு, தனலட்சுமி, பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் அகமது கபீர், பாபு, நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, புவனேஸ்வரி, சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், ராமு, சுகாதார ஆய்வாளர் தனபால் ஆகியோர் உள்ளனர்.