fbpx
Homeபிற செய்திகள்கோவை புலிய குளம் புனித அந்தோணியார் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு

கோவை புலிய குளம் புனித அந்தோணியார் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு

கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியரிடம் தேர்தல் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்த ரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட் சியரின் ஆணைக்கு இணங்க மாவட்ட கல்வி அலுவலரின் வழிகாட் டுதல் படி தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடல்கள், பேச்சு போட்டி, நாடகம் போன்ற நிகழ்வுகள் “ எனது வாக்கு எனது எதிர்காலம் &- ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

குறிப்பாக 18 வயது நிரம்பிய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு காசு வாங்க கூடாது, தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், எங்கள் வாக்கு எங்கள் உரிமை என்ற முறையில் வாக்காளர்கள் செயல்பட வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்து கூறப்பட்டது.

பள்ளியின் தலைமையா சிரியை அமலோற்பவ மேரி “இந்திய ஜனநாயகத்தில் மாணவர் பங்கு “ என்ற தலைப்பிலும் ,பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் “ “தேர் தலில் மாணவர் கடமை” என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

இறுதி யில் தேர்தல் குறித்த உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.நிகழ்வில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர் – ஆசிரியைகளும் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img