கல்லூரி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் தென்னிந்திய மெகா டெக் னோ கலாச்சார விளையாட்டு விழா நடை பெறுகிறது.
தொழில் நுட்பம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு விழாக்களை மேம்படுத்தும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் என்பது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குமரகுரு நிறுவனங்களின் மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கும் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா கோவை சரவ ணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் நடைபெறுகிறது.
19ம் தேதி (இன்று) முதல் மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தொழில் நுட்பம், கலாச்சாரம், விளை யாட்டு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் தொழில் சார்ந்த 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இதில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட உள்ளது.