கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட புல்லுக்காடு ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வாய்க்கால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, சுகாதார ஆய்வாளர் ராமு, உதவி பொறியாளர் ஜெயன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.