fbpx
Homeபிற செய்திகள்கோவை உயிர் அறக்கட்டளையின் ‘குட்டி காவலர்’ மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்...

கோவை உயிர் அறக்கட்டளையின் ‘குட்டி காவலர்’ மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

கோவை உயிர் அறக் கட்டளையின் ‘குட்டி காவ லர்’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி திட் டத்தை நாளை (அக்.12) காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து துவக்கி வைக்கிறார்.

உயிர் அமைப்பு கோவையில் ‘சாலை பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்’ என்ற நோக்கில் அறக்கட்டளையாக நிறுவப்பட்டது.

சஞ்சய் ஜெயவர்த்தன வேலு தலைவராகவும், கங்கா மருத்துவமனையின் டாக்டர் எஸ்.ராஜசே கரன் நிர்வாக அறங்காவல ராகவும் கொண்ட உயிர் அறக்கட்டளையில் 12 அறங்காவலர்கள் மற்றும் 10 உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்களும் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இந்த அமைப்பின் அலுவல் சாரா அறங்காவலர்களாக உள்ளனர்.
உயிர் அமைப்பானது நகரில் சாலைப் பாதுகாப்பிற்காக, ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து விதிமீறல்களைத் தானாகப் பதிவுசெய்வதற்கான உள் நாட்டு மென்பொருளுடன் ANPR கேமராக்களை நிறுவி உள்ளது.

மாநகர காவல் துறை யினருடன் இணைந்து மாநகரில் அதிகம் சாலை விபத்துக்கள் ஏற் படும் 18 இடங்களை கண்டறிந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை நகரின் விபத்துகளைக் குறைத்துள்ளன. 12 புதிய போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளை நிறுவி உள் ளது.

நகர காவல்துறையினர் தம் உடல் மீது பொருத்திக் கொள்ளும் வகையிலான 70 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரி தன்னார்வ மாணவர்களை சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வியை அறிமுகப் படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே ‘குட்டி காவலர்’ திட்டமாகும்.
முதலில் ஒரு சோதனை திட்டமாக சுமார் 40 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இப்பாடத்திட்டம், தமிழக அரசின் அனுமதியுடன் நடப்பு 2022-23-ம் கல்வி ஆண்டு முதல், கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

‘குட்டி காவலர்’ சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு கல்வி திட்ட துவக்க விழாவினை நாளை 12-ம் தேதி காலை 10.15 மணி அளவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து துவக்கி வைக்க உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சார்ந்த சுமார் 4.50 லட்சம் மாணவர்கள் குட்டி காவலர் உறுதிமொழியினை ஏற்க உள்ளார்கள். இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வானது ஒரு உலக சாதனை நிகழ்வாக முன் னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வின் நேரலையில், கோவை கொடிசியா வளாகத்தில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள், மாநகரின் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பங்கேற்க உள்ளார்.

‘குட்டி காவலர்’ திட்டத்தின் கீழாக 3 முதல் 5-ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8-ம் வகுப் புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்கக் கையேடுகளையும், மாணவர் பயிற்சி புத்தகங்களையும் முதல்வர் வெளியிடுகிறார்.

இத்தகவலை உயிர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img