fbpx
Homeபிற செய்திகள்கோவை உக்கடம் பெரியகுளத்தில் பொருட்காட்சியை திறந்து வைத்த கலெக்டர்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் பொருட்காட்சியை திறந்து வைத்த கலெக்டர்

கோவை மாநகராட்சி பெரியகுளத்தில் மாநகராட்சியுடன் ஸ்மார்ட் சிட்டி இணைந்து பொதுமக்களுக்கான 10.9.2022 மற்றும் 11.9.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் All in All அங்காடி பொருட்காட்சியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சமீரன், திறந்து வைத்து படகுக்குழாம் பகுதியை பார்வையிட்டு படகு சவாரி செய்தனர்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், பொதுசுகாதாரக்குழுத்தலைவர் மாரிச்செல்வன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முபசீரா, மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img