fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் பாடம் எடுப்பதில்லை என்று ஆட்சியரிடம் மாணவர்கள் முறையீடு

கோவை அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் பாடம் எடுப்பதில்லை என்று ஆட்சியரிடம் மாணவர்கள் முறையீடு

கோவை அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறை பேராசி ரியர் கடந்த ஆறு மாதமாக பாடம் எடுப்பதில்லை என்று கூறி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வரு கிறது இந்த துறையில் பேராசிரியராக இருப்பவர் பாத்திமா. இவர் கடந்த ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாண வர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வந்தனர்.

மேலும் ஆசிரியர் முறை யாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், “கடந்த 6 மாதமாக பேராசிரியர் பாடம் எடுக்காமல் உள்ளார். விரைவில் செமஸ்டர் தேர்வுகள் துவங்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை.

அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என்றார்

படிக்க வேண்டும்

spot_img