fbpx
Homeபிற செய்திகள்கோவை அன்னமநாயக்கனூர் வீதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அன்னமநாயக்கனூர் வீதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், குனியமுத்தூர், அன்னமநாயக்கனூர் வீதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை போர்கால அடிப்படையில் தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பாபு, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, சுகாதார அலுவலர் ராமு, உதவி பொறியாளர்கள் கணேசன், கனகராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img