fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 447 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு

கோவையில் 447 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு

கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தவிர்த்து மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. 


இந்நிலையில் மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.5 கோடிக்கு 447 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான, ஒப்புதல் மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, சுமார் 200 ஆழ்துளை கிணறுகள் மறுபுனரமைப்பு செய்யப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தால் மாநகராட்சி பகுதியில் உப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன,’’ என்றார்

படிக்க வேண்டும்

spot_img