Homeபிற செய்திகள்கோவையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலஉதவி வழங்கி மு.க.ஸ்டாலின் பேச்சு: தமிழ்நாடு வேகமாக...

கோவையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலஉதவி வழங்கி மு.க.ஸ்டாலின் பேச்சு: தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறது

கோவையில் 1 லட் சத்து 7 ஆயிரம் பேருக்கு ரூ.588 கோடியில் நலத் திட்ட உதவிகளை- முதல் வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதற்காக அவர் நேற்று இரவு சென் னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடந் தது.

இதில் பங்கேற்க முதல் -வர் மு.க.ஸ்டாலின், அரசு விருந்தினர்மாளிகையில் இருந்து புறப்பட்டு கார் மூலமாக கோவை ஈச்சனாரி விழா மைதானத் துக்கு சென்றார்.

அங்கு மிகப் பிரமாண் டமாக நடந்த அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியமைந்த 15 மாதங்களில் ஐந்து முறை கோவை பகுதிக்கு மட் டுமே வந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்ட மக்கள் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம் இது.

இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதை விட கோவை மாநாடு என்று சொல்லக்கூடிய வகையில், சிறப்பாக நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் எந்த அளவு மதிப்பும் மரியாதை யும் வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த கோவை மாநாடு சாட்சி.

எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு என ஒரு இலக்கை வைத்து வென்று காட்டக் கூடியவராக உள்ளார். செந்தில் பாலா ஜியை எவ்வளவு பாராட் டினாலும் போதாது.

கோவை பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்து பணியாற்றக்கூடிய அனைத்து அரசு அதிகாரி களுக்கும் தமிழக அரசு சார்பாக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்வதாக கூறினார்.

கோவை என்றாலே பிரம்மாண்டம் தான், தென்னிந்தியாவின் தொழில் நகரம் இந்த கோவையாகும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏராளமான நிறுவனங்கள் உள்ள இடமும் கோவையாகும். தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய நகரமாக கோவை உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு கோவை மாவட் டத்தில் அதிகம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்க ளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். இதுவே திமுக அரசின் சாதனை. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது.

தமிழக அரசின் திட்டங் கள் செயல்பாடுகளை மற்ற மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அந்தந்த மாநிலங் களில் செயல்படுத் துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.

கொளத்தூர் தொகு தியை போன்று அனைத்து தொகுதிகளுக்குமே முக் கியத்துவம் தரப்படுகிறது. உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரி வுபடுத்தப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கைகளை அனுப்ப எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

ஏதோ சிலருக்கு உதவி களை செய்து ‘கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல; மக்களுக்கு கணக் கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்துத் தொகுதிகளிலும்வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப் படும்.

வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக் காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன்; இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட் டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன்; அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்காக ரூ.1810 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம், கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திட்டம். சிறுவாணி அணையில் இருந்து நீர் திறக்க கேரள முதல்வரிடம் கோரினேன், உடனே நீர் திறந்துவிடப்பட்டது.

சென்னையை போல் கோவையில் வீட்டு மனையை வரைமுறைப்ப டுத்த, அங்கீகரிக்க கோவை மாநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகு இந்திய குடியரசு தலைவரை சந்திக்க அன்மையில் டெல்லிக்கு சென்றேன்.

அப்போது வளர்ச்சி குறித்து உயர்ந்த கேள்வி கேட்டார்கள். பெரியார், கலைஞர் வகுத்த பாதையால் நமக்கு கிடைத்த நற்பெயர். பேட்டி கொடுப்பதற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்தால் தமிழக மக்களுக்கு வழங்கும் நன்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளமுடியாது.

கட்டணமில்லா பேருந்து, வீட்டிற்கே சென்று சிகிச்சை, இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள், நான் முதல்வன் திட்டம் மூலமாக பயன்பெறும் மாணவர்கள், ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் பெறும் தமிழக அரசு ஊழியர்கள் நன்றி மறவாமல் உள்ளனர்.

சென்னையைபோல் கோவையில் வீட்டும னையை வரைமுறைப் படுத்த, அங்கீகரிக்க கோவை மாநகர வளர்சி குழுமம் உருவாக்கப் பட்டுள்ளது. கோவை மாநகராட் சியில் பழுதடைந்த சாலைகள் 200 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய சிறை இடமாற்றி 200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள் ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளின் சார் பில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்தியாவிலேயே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து பொதுப்பணித்துறை, கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உள்பட பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதேபோல் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கும் முதல்-வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் கல்பனா, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், சண்முகசுந்தரம், பிஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மருதமலை சேனாதிபதி, நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), சிஆர்.ராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா நடைபெறும் ஈச்சனாரி, பொள்ளாச்சி ஆச்சிபட்டி உள்பட அனைத்து இடங்களிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர். விழா நடைபெறும் ஈச்சனாரியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

படிக்க வேண்டும்

spot_img