fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘ரா மேட் இந்தியா’ கண்காட்சி வரும் 14 முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது

கோவையில் ‘ரா மேட் இந்தியா’ கண்காட்சி வரும் 14 முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது

கோவை கொடீசியா வளாகத் தில் ‘ரா மேட் இந்தியா 2022’ என்ற பெயரில் தொழிற்துறைக்கான மூலப்பொருள்கள், இடுபொருள் மற்றும் சேவைக்கான கண்காட்சி வருகிற 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை 3 நாள் நடக்கிறது.

இது குறித்து கொடீசியா சேர்மன் வி.திருஞானம், செய லாளர் சசிகுமார், ரா மேட் இந்தியா 2022 சேர்மன் டாக்டர் சி.பி.செந்தில்குமார், உதவி சேர் மன் வி.சரவணக்குமார் ஆகி யோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையில் பல தொழிற்சாலைகள் சிறு, குறு மற்றும் மத்திய வர்க்கத்தை சார்ந்தவையாகும். இதன் அடிப்படையில் வரும் 14-ம் தேதி கொடீசியா வளாகத்தில் தொழிற்துறைக்கான இடுபொருள் மற்றும் மூலப்பொருட்கள் சேவைக் கண்காட்சி 2-வது பதிப்பாக நடக்கிறது.

கண்காட்சி 16-ம் தேதி வரை 3 நாள் நடக்கிறது.
கண்காட்சியில் மேற்குவங்கம், மகாராஷ்டிரா, அரியானா, குஜராத், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்திலிருந்து 88 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
கண்காட்சிகாலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

அனுமதி இலவசம். ஏர் கமாண்டர் சஞ்ஜீப் விஸ்ம் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். இந்த கண்காட்சி மூலம் ரூ.150 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img