fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாணவர்களைதேடி வரும் நடமாடும் நூலகம்- மாநகராட்சி அசத்தல்

கோவையில் மாணவர்களைதேடி வரும் நடமாடும் நூலகம்- மாநகராட்சி அசத்தல்

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு செல்லும் நடமாடும் நூலகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் உங்களைத் தேடி நூலகம் என்ற பெயரில் நடமாடும் நூலகம் சேவை துவங்கப்பட்டுள்ளது. டெம்போ டிராவலர் வேனில் இந்த நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ் ஆங்கில மொழிகளில் 800 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இலக்கணம், இலக்கியம், வரலாறு, உரைநடை, கதை, ஆளுமைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

சோதனை அடிப்படையில் தற்போது ஒரு வாகனம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img