fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி: மாணவிகள் ஷாலினி, சினேகா முதலிடம்

கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி: மாணவிகள் ஷாலினி, சினேகா முதலிடம்

தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கோவை ராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடத்தப் பெற்றது.

இப்போட்டியினை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். பள்ளி அளவில் 5 தலைப்புகளின் கீழும், கல்லூரி அளவில் 6 தலைப்புகளின் கீழும் நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில் 60 பள்ளி மாணவர்களும், 25 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

பள்ளிப் போட்டிக்கு நடுவர்களாக கோவை, ராஜவீதி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியை ஐ.ச. மேபல் ஜெசி சந்திரா, மன்பஉல்உலூம் மேல் நிலைப்பள்ளியின் தமிழாசிரியை இர.பூர்ணிமா தேவி மற்றும் சமத்தூர் வானவராயர் அரசு மேனிலைப்பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியை நிர்மலா தேவி ஆகியோர் செயல்பட்டனர்.

கல்லூரிப் போட்டிக்கு நடுவர்களாக கோவை அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் சேனாவரையன், ஸ்ரீராம கிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் உதவிப்பேராசிரியர் ஆனந்த் மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெசிந்தா கிரேஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

பள்ளி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டியில் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஷாலினி முதல் பரிசினையும், பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஸ்ரீசாந்த் இரண்டாம் பரிசினையும், காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ராம்பிரியா மூன்றாம் பரிசினையும் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசினை வெள்ளலூர் அரசு மேனிலைப்பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி காயத்திரி மற்றும் கிணத்துக்கடவு அரசு மேனிலைப்பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ரோஹினி ஆகியோர் பெற்றனர்.

கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டியில் சட்டக்கல்லூ ரியில் நான்காமாண்டு பயிலும் மாணவி சினேகா முதல் பரிசினையும், பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் இளமறிவியல் இயற்பியல் இரண்டாமாண்டு பயிலும் மாணவன் ராபின் ஜோஸ்வா இரண்டாம் பரிசினையும் மற்றும் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் பயிலும் மோனிகா மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img