fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இன்று பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்- கருத்தரங்கு

கோவையில் இன்று பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்- கருத்தரங்கு

கோவையில் உள்ள ஹோட்டல் ஹெரிடேஜ் இல் இன்று (23ம் தேதி) பெண்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடை பெற்றது.

இம் மாநாட்டை கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இயங்கிவரும் குட்ஷெப்பர்டு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது. இந்நிறுவனம் 1977ம் ஆண்டு முதல் பெண்களுக்கான சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை அளித்துவருகிறது.

இம்மாநாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கிவரும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி பயிற்றுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கை முதன்மை இயக்குநர் சிஸ்டர் அனிலா மேத்யூ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் ரீனா மற்றும் அறிவரசு ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் நீதி கிடைப்பதில் பெண்களுக்கான வாய்ப்புகள், சவால்கள் குறிப்பான கலந்தாய்வு நடத்தினர்.

இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களையும் அளித்த னர்.

பெண்களுக்கான நீதி தாமதமின்றி கிடைப்பதற்கான சட்டங்கள் மற்றும் நீதிகள், சமூக, பொருளாதார பாகுபாடற்ற நீதி அடிமட்ட மக்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான விவாதங்களுக்கான பதில்களும் நெறிமுறைகளும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விழாவில் குட்ஷெப்பர்டு நிறுவனத்தின் புரொவென்சியல் கவுன்சிலர் சிஸ்டர் செலின் மற்றும் ஆண்டனி பீட்டர் (வருமான திட்ட ஒருங்கிணைப்பாளர்) திட்ட இயக்குநர் தீபி, குட்ஷெப்பர்டு இயக்குநர் ரோஷினா, தொடர் அதிகாரி செரின் பி.தாமேஸ் மற்றும் சகோதரி லோயில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img