தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது திராவிட மாடல் ஆட்சியால் நாட்டிலேயே சிறந்த முதல்வராகத் திகழ்கிறார். கடந்த ஓராண்டு கால ஆட்சியில் அவர் செய்த சாதனைகள்… பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், மீண்டும் மஞ்சள் பை திட்டம்… என பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். ஐந்தாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய சாதனைகளை ஒரே ஆண்டில் நிகழ்த்திக் காட்டி மக்கள் இதயங்களில் இடம் பெற்றுத் திகழ்கிறார்.
தொழில் வளர்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் தரும் திமுக அரசு, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” எனும் நிகழ்வை கோவையில் நடத்தியது.
சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2 லட்சத்து 5 ஆயிரத்து 802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று கோவையில் தொழில் அமைப்பினருடன் முதல்வர் நடத்திய கலந்துரையாடலின் போது, கோவையின் வளர்ச்சிக்காக தனியாக மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தப்பேச்சு, கோவையின் வளர்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதோடு, கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறது என்று அதிமுக முன்வைத்த பொய்ப்பிரசாரமும் அடியோடு நொறுங்கிப் போனது.
கோவை மாவட்டம் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிவிரைவாக முன்னேறுவதற்கான வளர்ச்சிப்பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வழிகாட்டியிருக்கிறார்.
கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்று பேசி ஊக்க மருந்தும் கொடுத்து இருக்கிறார்.
கோவையின் வளர்ச்சி, கொடி கட்டிப் பறக்கட்டும்!