fbpx
Homeபிற செய்திகள்கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சுற்றுலா: கோடைவிழாவில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சுற்றுலா: கோடைவிழாவில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். கோடை விழாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத் தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியையும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்குகளையும், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலை நிகழ்ச்சி களையும் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி, பழனி எம்எல்ஏ.,இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ., ச.காந்திராஜன் முன் னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசிய தாவது:

கொடைக்கானல் ஏரியை ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுத் தப்படுத்தப்பட்டது. ஏரியை சுற்றி மின் விளக்குகள், நடை பாதைகள், படகுகுழாம் மற்றும் கொடைக்கானல் அழகை மேம்படுத்துவதற்காக பல திட்டங் கள் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளன.

பாதை ஓரத்தில் கடை வைத்திருக்கும் 600 வியாபாரிகளுக்கு இலவசமாக கடைகள் வழங்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கொடைக் கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இங்கே விளையும் மருத்துவ குணம் கொண்ட பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கொடைக்கானல் மேல்மலையில் விளையும் பூண்டின் தரத்திற்கு இணையாக இந்தியாவில் வேறு எங்கும் பூண்டு கிடையாது. பூண்டு விளைச்சலை அதிகப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மன்னவனூரில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்காக அர சாணை பெறப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் விரை வில் தொடங்கப்படும். கொடைக்கான லில் ஹெலிகாப்டர் சுற்றுலா அமைக்க வில்லுப்பட்டி அருகே 1.25 ஏக்கர் நிலம் சுற்றுலாத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, சுற்று லாப்பயணிகள் ஹெலிகாப்டரில் சுற்றுலா சவாரி செய்து கொடைக்கானலின் எழில்மிகு இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் கொடைக்கானல் பகுதியில் கேபிள் கார் அமைக்க சாத்தியக்கூறு உள்ள இடங்களை ஆய்வு செய்து, வாய்ப்பு உள்ள இடங்களில் கேபிள் கார் அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் விடுதிகளில் தங்குவதை விட கூடாரம் அமைத்து தங்குவ தையே விரும்புகின்றனர். அதற்கான வழிகாட்டு நெறி முறைகள் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தை சிறந்த சுற்றுலா மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தலம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரும் பேசினார்கள்.

விழாவில் சுற்றுலா இயக்கு நர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சந்தீப் நந்தூரி, தோட்டக்கலை மற் றும் மலைப்பயிர்கள் துறை மேலாண்மை இயக்குநர் பிருந்தா தேவி, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர்கள் திலீப், பிரபு, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாஸ்கரன், கொடைக்கானல் ஆர்.டி.ஒ. முருகேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், கொடைக்கானல் நக ராட்சித்தலைவர் செல்லத்துரை,

துணைத்தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன் றியக் குழுத் தலைவர் சுவேதா ராணி, துணைத்தலைவர் முத்துமாரி, கொடைக்கானல் நகராட்சி கவுன்சிலர் இருதய ராஜா, கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் சிவராஜ், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி, கொடைக்கானல் தோட்டக்கலைத் துணை இயக்குநர் பாண்டியராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் விவசாயிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img