கோவை கொடீசியா அரங்கில் சைமா டெக்ஸ்ஃபேர் 2022 என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் துணை கருவிகள் இடம் பெற்ற 13வது சர்வதேச கண்காட்சி வருகிற 24ம் தேதி முதல் 27ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
24-ந்தேதி நடைபெறும் தொடக்கவிழாவில் மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியுஸ்கோயல் கலந்து கொண்டு சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைக் கிறார். விழாவில் மத்திய மந்திரி முருகன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து சைமாவின் தலைவர் ரவி சாம் மற்றும் துணைத் தலைவர் எஸ்.கே சுந்தரராமன் ஆகியோர் கூறியதாவது: 220 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 295 ஸ்டால்களில் தங்கள் பொருட் களை கண்காட்சியில் வைக்க உள்ளார்கள்.
தமிழகத்தை தவிர குஜராத், மராட்டியம், ராஜஸ் தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, டாமன்&டையூ மற்றும் கோவா ஆகிய மா நிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளார்கள்.
இதுதவிர ஐரோப்பிய ஒன்றியத் தின் அங்கமான சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் மற்றும் ஜப்பான், சீனா நாடுகளையும் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப் பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.
ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், நான்கு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிப்பதற்கும் செலவிடுகிறார்கள்.
அவ்வாறு வாங்கும் பொருட்களை தீர்மா னிப்பதற்கும், புது இயந்திரங்கள் வாங்க முடிவு செய்வதற்கும் இந்த கண்காட்சி சரியான இடமாக அமையும்.
இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திர ங்களையும் உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்குவிப் பதும் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
ஜவுளித்துறை சம்மந்தப்பட்ட அனைவரும் இந்த கண்காட்சியில் கூடுவதால் ஜவுளித்தொழிலின் பல்வேறு பிரிவுகளின் உரிமையாளர்களும் பணியாளர்களும் இந்த கண் காட்சிக்கு விஜயம் செய்து பயனடைய வேண்டும்.
நாடு முழுவதுமிருந்து ஒரு லட்சம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிடுவர் என்று எதிர்பா ர்க்கிறோம். இந்த கண்காட்சியின் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின் போது துணை பொது மேலாளர் சுரேஷ் உடன் இருந்தார்.