fbpx
Homeபிற செய்திகள்கொடிசியா வளாகத்தில் இயந்திரம், பொறியியல் தொழில் கண்காட்சி

கொடிசியா வளாகத்தில் இயந்திரம், பொறியியல் தொழில் கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில், ஜூன் 2ம்தேதி முதல் 6 ம்தேதி வரை, 19 வது, சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடை பெற உள்ளது.

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கொடிசியா அலுவலகத் தில் கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு வியாழக்கிழமை செய்தியா ளர்களை சந்தித்தார்.

அப் போது அவர் கூறியதாவது: கோவையில் இன்டெக் 2022, என்ற 19 வது, சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி ஜூன் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது வரை 400 ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனாதொற்றை கடந்து வந்த பின் நடை பெறும் முதல் கண்காட்சி இது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியின் தலைவர் ராமச்சந்திரனும், துணைத் தலைவர், பொன்னுசாமி இருவரும் இதனை முறைப்படுத்தி உள்ளனர்.

மொத்தம் 488 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பிடித்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img