fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரியில் உலகத்தர கல்வியுடன் வேலைவாய்ப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் உலகத்தர கல்வியுடன் வேலைவாய்ப்பு

கொங்கு பொறியியல் கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு சிறப்பு மிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.

இக்கல்லூரியின் 10 இளங்கலை பொறியியல் பாடப்பிரிவுகளும் தேசிய தர நிர்ணயக்குழுவின் (என்பிஏ) அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு பிரிவும் தேசிய தரக்குழுவின் வருகைக்காக காத்து உள்ளது.

மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று (என்.எ.எ.சி) அமைப்பின் மூலம், ‘ஏ++’ கிரேடு அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இக்கல்லூரி 1984-ம் ஆண்டு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்லூரி அறக்கட்டளை பெருந்துறை மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கல்லூரி பெருந்துறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் 167 ஏக்கர் பரப்பளவில் அமை ந்துள்ளது. இந்த கல்லூரி 23 லட்சம் சதுர அடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை கொண்டுள்ளது.

கொங்கு பொறியியல் கல்லூரியில் சுமார் 8500 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் (14 இளங்கலை பொறி யியல் (பிஈ/பிடெக்) மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், ஈசிஈ, சிஎஸ்ஈ, ஐடி, ஈஈஈ, ஈஐஈ, கெமிக்கல், புட் டெக்ன £லஜி, எஐடிஎஸ், எஐஎம்எல், சிஎஸ்டி, மூன்று வருட இளங்கலை பாடப்பிரிவு பிஎஸ்சி – கம்ப்யூட்டர் சிஸ்டம் டிசைன், இன்பார் மஸின் சிஸ்டம் டிசைன், சாப்ட்வேர் சிஸ்டம் டிசைன், 15 முதுகலை (எம் ஈ / எம் டெக், எம் பி ஏ, எம் சி ஏ, எம் எஸ் சி (சாப்ட் வேர் சிஸ்டம்ஸ்), மற்றும் 16 ஆராய்ச்சி துறைகளில் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் அனு பவம் வாய்ந்த 553 பேராசிரியர்கள் (இதில் 260 முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்), 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆராய்ச்சித் துறைக்காக சிறப்பு கவனமும் செலுத்தி வருகிறது இக்கல்லூரி. இது வரையில் கொங்கு பொறியியல் கல்லூரியின் 14 தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டு உள்ளது. மேலும் 88 தயாரிப்புகள் வெளியி டப்பட்டு காப்புரிமை பெற காத்து உள்ளன.

இக்கல்லூரி பேராசிரியர்களின் கண்டு பிடிப்புகள் 3450 ஸ்கோப்பஸ் இண்டெக்ஸ்டு ஜர்னல் (scopous), 1050 வெப் ஆப் சயின்ஸ் இண்டெக்ஸ்டு ஜர்னல் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு உள்ளன. இதனுடன் 158 புத்தகங் களையும் இக்கல்லூரி பேராசிரி யர்கள் எழுதி உள்ளனர்.

31 கோடி அளவில் மானியத்தை, ஏஐசிடிஈ, யூஜிசி, டிஎஸ்டி, டிஐடி, சிஎஸ்ஐஆர் போன்ற அரசு நிறுவனங்கள் மூலம் ஆராய்ச்சி பணிக்காக இக்கல்லூரி பெற்றுள்ளது. தொழிற்சாலைகளுடனான கல்லூரியின் தொடர்பை ஊக்குவிக்கும் பொருட்டு IIPC என்ற தனி அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

இதன் மூலம் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு ஆலோசனை வழங்குதல், தொழிற்சாலைகளில் சோதனை செய்தல் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின், தொழிற்சாலைகளுடன் தொடர்பில் உள்ள சிறந்த கல்லூரி என்ற விருதை பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள கல்வி மற்றும் தொழில் முனை வோருக்கான அமைப்பும் இக்கல்லூரிக்கு 2014, 2015, மற்றும் 2016 ஆண்டுகளில் விருது வழங்கி உள்ளது.
சென்ற கல்வி ஆண்டில், தரம் வாய்ந்த 250-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில், இக்கல்லூ ரியில் பயின்ற 1412 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்று ள்ளனர். மேலும் 650 மாணவர்கள் ஊக்கத் தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியின், ‘தொழில்முனைவோர் மேம்பாட்டு குழுமம்’ என்ற அமைப்பு, “பெஸ்ட் ஈ செல் ஆண்டர்ப்ரநர்ஷிப் எகோ சிஸ்டம் பில்டர் அவார்ட் 2015” என்ற விருதை இந்திய அரசின் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு கழகத்திடமிருந்து பெற்றுள்ளது.

கொங்கு பொறியியல் கல்லூரியின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் என்ற அமைப்பு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திடமிருந்து சுமார் 4 கோடியினை மானியமாக பெற்றுள்ளது . இதன் மூலம் 92 இளம் தொழில் முனைவோர் பலன் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பு இந்திய அரசின் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சுமார் 12.52 கோடியினை மானியமாக பெற்றுள்ளது. இப்படி சிறப்பாக செயல்பட்டு 2013-ம் ஆண்டு இந்தியாவில் சிறந்த இன்குபேட்டர் என்ற விருதினை அன்றைய குடியரசு தலைவரிடமிருந்து பெற்றது குறிப்பிடத் தக்கது.

பல்வேறு விருதுகளை கொங்கு பொறியியல் கல்லூரி பெற்றிருந்தாலும், மணிமகுடமாக உள்ள சில விருதுகள் ஏஐசிடிஈ யிடமிருந்து சிறந்த தூய்மையான வளாகம் விருது (2017), எம்ஹெச்ஆர்டி யிடமி ருந்து உயர் கல்வி நிறுவ னங்களில் ஐந்தாவது தூய்மையான கல்லூரி விருது (2019), மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து சுயநிதி கல்லூரிகளுக்கான பிராண்ட் எக்சலெண்ட் அவார்ட் (2021), தமிழக அரசிடமிருந்து பசுமை வளாகம் விருது (2021), மற்றும் என்சிசி டெபுடி டைரக்டர் ஜெனரல் விருது (2022).

படிக்க வேண்டும்

spot_img