கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, இந்திய அரசின் நிதி ஆயோக்கின் துணை ஆலோசகர் முனைவர் எஸ்.பி. முனிராஜூ பேசியதாவது:
கலை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிற கல்லூரியாக கொங் குநாடு கலை அறிவியல் கல்லூரி திகழ்கிறது. தென்னிந்தியாவின் சிறந்த தொழில் நகரமான கோவையில் தலை சிறந்த அறிவு நிலையமாக இக்கல்லூரி விளங்குகிறது.
இவ்வுலகம் மிகப்பெரியது. மாணவர்கள் சொந்த மாவட் டத்துக்கு உள்ளேயே தங்களின் அறிவையும் திறமையையும் முடக்கிக் கொள்ளக் கூடாது. அமைதி, அன்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் போதிப்பது இந்து மதம். இந்தியா உலகிற்கே விஷ்வகுருவாய்த் திகழ் கிறது என்றார்.
கல்லூரிச் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை தாங்கி பேசி னார். கல்லூரி முதல்வர் மா.லச்சுமண சாமி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் வி.சிவசக்தி வரவேற்றார்.
இக்கல்லூரியின் முதல் முதல்வராகவும் நீண்ட காலச் செயலராகவும் மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் இருந்த மறைந்த முனைவர் மா.ஆறுச்சாமியின் சாதனை களை விளக்கும் பாடல் இடம் பெற்ற குறுந்தகட்டை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்களையும், சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித் துறை ஆகியவற் றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். மாணவர் பேரவை செயலர் எம்.சுதர்சனன் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சாதனைக்குருந்தகட்டில்
இடம் பெற்றபாடல்
அருமைச்சாமி எங்கள் ஆறுச்சாமி
ஆறுபடை முருகனின்
பெயர் கொண்ட சாமியே
கொங்குநாடு கல்லூரியை
வடிவமைத்த சிற்பியே
ஏழைகளின் கல்விப்பசி
ஆற்றிய திருத்தொண்டரே
எங்களுக்கும் வாழ்வுதந்த
எங்கள் குல தெய்வமே
அறிவியல்பால் பற்றுடைய
பெருமைமிகு ஆசானே
ஆராய்ச்சியில் நாட்டம்கொண்ட
அறிவார்ந்த முனைவரே
அயல்நாட்டில் நிதிபெற்று
ஆராய்ந்த அறிஞரே
விருப்புடனே பணியாற்றி
விருதுபெற்ற முதல்வரே
சீர்மிகு கலைகளையே
சீராட்டிய கலைஞரே
இல்லாதோருக்கு இல்லமளித்த
இனிய அருளாளரே
துணிவின் மறுஉருவென
செயலாற்றும் வீரரே
தேசியத்தர மதிப்பீட்டினில்
உச்சம்தொட்ட செயலரே
பணியின் சிறப்பறிந்து
பணியாற்றும் தீரரே
தனித்திறன் கல்லூரியென
உருவாக்கிய தலைவரே
பேச்சினிலே கனிவுகொண்டு
அரவணைக்கும் தந்தையே
உள்ளத்திலே பலம்கொண்டு
செய்கின்றாய் சிந்தையே
வாக்கினிலே தெளிவுகொண்டு
உரைத்திடும்செயல் விந்தையே
பல்கலைக்கழக மானியக் குழுவின்
உயர் தூண்களும்
உம்பெயர் சொல்லும்
உயர்கல்வியை உயர்த்திடத்
துடிக்கும் உம்எண்ணங்கள்
என்றும் வெல்லும்!
-முனைவர் ம.விக்னேஸ்வரன்,
உதவிப் பேராசிரியர்,
கணிதவியல் துறை,
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,
கோவை.