fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். மில் வளாகத்தில் கல்விப் பிரிவில் பணியாளர்களுக்காக தொடர் சொற்பொழிவு

கே.பி.ஆர். மில் வளாகத்தில் கல்விப் பிரிவில் பணியாளர்களுக்காக தொடர் சொற்பொழிவு

கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவில், “கற்பதற்கு ஏற்ற காலம்” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது

கேபிஆர் மில் நிறுவனத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உற்பத்தி பிரிவில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், தங்களது மேற்படிப்பை பகுதி நேரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்வி பிரிவானது பணியாளர்கள், உயர் படிப்பிற்கான பாடங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல பல்வேறு சிறப்பு சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த வகையில் “கற்பதற்கு ஏற்ற காலம்‘ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக “கல்வியும் மனித மாண்பும்“ என்ற தலைப்பில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். பாலச்சாமி, கேபிஆர் மில் நிறுவனத்தின் நீலாம்பூர் வளாகத்தில் உள்ள உயர்கல்வி பயிலும் பெண் பணியாளர்களிடத்தில் சிறப்புரையாற்றினார்.

கேபிஆர் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவின் முதல்வர் மற்றும் நீலாம்பூர் வளாகத்தின் மனிதவள பிரிவு மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img