இந்தியாவின் ‘மகிழ்ச்சியான கல்வி நிறுவனங்கள் மற்றும் தரமான கல்வி நிறுவனங்களுக்கான விருதுகள்’ கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் க்யூஎஸ் குவாக்குரேளி சைமன்ட்ஸ் (QS Quacquarelli Symonds)இன் இந்திய துணை நிறுவனமான க்யூஎஸ் ஐ காஜ் (QS I-GAUGE) இந்தியாவின் மகிழ்ச்சியான கல்வி நிறுவனங்களுக்கான விருதுகளை, புது தில்லியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் அறிவித்தது.
மிக நுண் மையான மற்றும் தேர்ந்த மதிப்பீட்டு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இவ்விருதுகளை அந்நிறுவனம் வழங்கியது.
இந்த தொடர்மதிப்பீட்டு முறையானது தொழில்துறை அமைப்பான அஸோசம் (ASSOCHAM) உடன் இணைந்து, முறை யான மதிப்பீட்டிற்குப் பின், தரமான கல்வி மற்றும் மகிழ்ச்சியான கல்வி நிறுவனங்களுக்கான இவ்விருதுகள் அறி விக்கப்பட்டன.
புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி, தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், கல்வியாளர்கள் மாணவர்களின் மகிழ்ச்சியின் நிலை மற்றும் அவர்களின் நல்வாழ்வு பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியம். இது கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு உதவும் எனக் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சிக்கான நிறுவனம் மற்றும் QS I-GAUGE மதிப்பீடு ஆகிய இரண்டையும் பெற்ற பல நிறுவனங்களுக்கு, மகிழ்ச்சியான நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் என்ற அங்கீகாரம் இரட்டை விருதுகளாகவும் பெருமையாகவும் அமைந்தது.
QS I-GAUGE இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் டாக்டர் அஷ்வின் பெர்னாண்டஸ் பேசினார்.
இவ்விருது பற்றி கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அகிலா குறிப்பிடும்போது, “தமிழகத்தில் செயல் பட்டுவரும் உயர்கல்வி நிலையங்களில், க்யூஎஸ் ஐ – காஜ் நிறுவனத்தால் ‘வைரத் தரச் சான்றிதழ் தர மதிப்பீடு பெற்ற கல்லூரி’ ((DIAMOND College Rating by QS I-GAUGE) என்ற விருது எங்களோடு இயைந்து பணிபுரியும் அனைத்து தரப்பினரின் தொடர்உழைப்பிற்கும், ஈடு பாட்டிற்கும் கிடைத்த வெகுமதி என கருதுகிறோம்.
இனிவரும் காலங்களிலும் எங்களது செயல்முறைகளை திறம் பட தகவமைத்துக்கொள்ளவும் முனைப்பு டனும் மாணவர்களுக்கு பயிற்சி யளிக்கவும் திட்டமிட வைக்கிறது எனத் தெரிவித்தார்