Homeபிற செய்திகள்கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்விப் பிரிவு ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா- மலேசிய அமைச்சர் பங்கேற்றார்

கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்விப் பிரிவு ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா- மலேசிய அமைச்சர் பங்கேற்றார்

கோவை கே.பி.ஆர் நிறுவனங்களின் பெண் பணியாளர் கல்விப் பிரிவின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், குறிஞ்சி தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு குறிஞ்சி விருதுகள் விழா வும் அரசூர் கேபிஆர் மில் வளாகத்தில் நேற்று (26ம் தேதி) நடைபெற்றது.

கே.பி.ஆர். குழும நிறுவ னங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பேசுகையில், பெண் பணியாளர்களின் பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு பற்றிய கனவை நனவாக்கவே தொடங்கப் பட்ட இந்த கல்விப் பிரிவானது இன்றுவரை 31,627 மாணவிகள் தேர்ச்சி பெற்ற ஒரு பிரிவாக விளங்குகிறது என்றும், இதன் மூலம் பயன்பெற்ற பெண்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாகவும், கேபிஆர் குழும நிறுவனங்கள் இந்த கல்விப் பிரிவின் சேவையை தொடர்ந்து செய்வது நாட்டிற்கு ஆற்றும் சமுதாயத் தொண்டு என கருதுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விழாவில் மலேசிய நாட் டின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:

நல்ல மனிதவளத்தை உருவாக்குவது என்பது அவர்களு டைய திறன்களை தொடர்ந்து மேம் படுத்துவதிலும் வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் கொடுப்பதிலும் தான் இனி வருங்கால உலகம் இயங்கும். உலகமயமாக்கலின் மூலம் உலகம் முழுவதும் அதிக மான வேலை வாய்ப்புகளை உருவாக்கு வது என்பது திறன்சார்ந்த பயிற்சிக ளால்தான் முடியும்.

அந்த நோக்கத்தில் கேபிஆர் பெண் பணியாளர் கல்விப்பிரிவு சிறந்து செயல்படுகிறது. அவர்களுடைய தொடர்ந்த 15 ஆண்டு சேவையை மனமுவந்து பாராட்டுகிறேன்.

வருங்காலத்தில் விவசாயம் சார்ந்த நிலங்கள் குறைந்து மக்களுடைய உறைவிடமாக மாறும்பொழுது உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வரலாம். வரக்கூடிய 30 முதல் 50 ஆண்டுகளில் அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பது குறித்து ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்.
மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் தொழிலாளர்கள் பயிற்சிகள் திறன்மேம்படுத்தல் போன்றவற்றை திட்டமிடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, மேடையிலே மூன்று வேந்தர்கள் கூடியுள்ளதாகக் குறிப்பிட்டு, குறிஞ்சி தமிழ்ச் சங்கத்தின் நல்ல நிகழ்ச்சிகளையும் தமிழ் சார்ந்த சேவைகளையும் பாராட்டி, பட்டங்கள் பெற்ற மாணவிகளை வாழ்த்தினார்.

குறிஞ்சி தமிழ்ச்சங்க விருதுகள் விழாவில், “குறிஞ்சி தமிழ்ச்செம்மல் விருது” பெற்ற கவிஞர் கலைமாமணி பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம் பேசுகையில், “இந்த விருதினை கேபிஆர் குழும நிறுவனங்களில் இருந்து பெறுவது தமக்கு பெருமை எனவும், சிறப்பு விருந்தினர் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பை, லட்சக் கணக்கான மரங்களை நடுவதன் மூலம் டாக்டர் கே.பி.ஆர் சமுதாயப் பணியை ஆற்றி வருகி றார் எனவும், அவர்களால் உயர் நிலைக்கல்வி வழங்கப்படும் மாணவிகள் வரும் காலத்தில் இந்தியப் பெருநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவார்கள் எனவும், கேபிஆர் குழுமங்களின் குறிக்கோள் இலட்சியப் பாதையில் தொடரவேண்டும் எனவும் வாழ்த்தினார்.

இவ்விழாவில் “குறிஞ்சி தமிழ் நல்லாசிரியர் விருது” பெற்ற தமிழ் ஆசிரியை ஷியா மளா குறிப்பிடும்போது தமிழ் ஆசிரி யையாக ஆங்கில மயமாக்கப்பட்ட பள்ளிகளில் எனது பணிகளை தொடர்ந்து செய்வதற்கும், இன்றைய இளைய தலைமுறையினர் தாய்மொழி வழிக்கல்வியைக் கற்று தாய்மொழியின் பெருமையை உணருமாறு நான் செயல்படுவதற்கு இந்த விருது தம்மை ஊக்குவிப்பதாக அமைகிறது எனக் குறிப்பிட்டார்.

கே.பி.ஆர். மில்ஸ் குவாண்டம் 3 நிறுவனத்தைச் சார்ந்த மாணவி செல்வி. நிவேதிதா பி.சி.ஏ. படிப் பில் முதலிடம் பெற்று சிம்கா தரப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த சாதனை, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கேபிஆர் பெண் பணியாளர்கள் கல்விப்பிரிவு மாணவிகளை முதல்நிலையில் இருத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பட்டமளிப்பு விழாவில், ஏழு மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று, தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனர். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவி களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத்தொகையும் கே.பி.ஆர் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

சுமார் 603 மாணவிகள் இன்று தங்களுடைய பட்டங்களை பெற்று இந்த 2022 தொகுப்பில் தேர்ச்சி பெற்றவர் களாக விழா மேடையில் அறிவிக் கப்பட்டனர். இந்த விழாவில் கேபிஆர் பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவின் முதல்வர் பேராசி ரியர் பா.சரவண பாண்டியன் வரவேற் புரை நல்கினார்.

குறிஞ்சி தமிழ்ச்சங் கத்தின் செயலாளர் முனைவர் தெ.கணேஷ்குமார் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடு களை கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்விப்பிரிவு, கே.பி.ஆர் மில்ஸ் லிமிடெட், அரசூர் மற்றும் குறிஞ்சி தமிழ் சங்கம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

இவ்விழாவில் பங்கேற்க மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள், தமிழக கல்வி நிலையங்களுக்கும் மலேசிய கல்வி நிலையங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித் தும் கலந்துரையாடினர்.

படிக்க வேண்டும்

spot_img