Homeபிற செய்திகள்கேஷ் பேக் உடன் விவோவின் சலுகைகள்: ரூ.101 முன்பணம் தந்தால் ஸ்மார்ட் போன்

கேஷ் பேக் உடன் விவோவின் சலுகைகள்: ரூ.101 முன்பணம் தந்தால் ஸ்மார்ட் போன்

பண்டிகை நாட்களில் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வரும் விதமாக உலகளாவிய புதுமைமிக்க ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் “பிக் ஜாய் தீபாவளி” என்னும் திட்டத்தை அறித்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து ஸ்மார்ட்போன் களுக்கும் ஏராளமான சலுகைகள் மற்றும் கேஷ் பேக் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விவோவின் எக்ஸ்80 மாடல், வி25 மாடல், ஒய்75 மாடல், ஒய்35 மற்றும் இதர ஒய் மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளு படிகளை விவோ வழங்குகிறது.

இந்த சலுகை திட்டங்கள் அனைத்தும் வரும் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
எக்ஸ்80 மாடல் ஸ்மார்ட்« பான்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் மற்றும் வி25 மாடல்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது

ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் இதர வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது

முன் பணமாக வெறும் 101 ரூபாய் செலுத்தி விரும்பும் எக்ஸ் மற்றும் வி மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கிச் செல்லாம். 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கூடுதலாக 6 மாதம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

ஒய் மாடல் ஸ்மார்ட்போன்: 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இந்த மாடல் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் முன் பணமாக வெறும் 101 செலுத்தி வாங்கிச் செல்லலாம்.

ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் இதர வங்கிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போது 2 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஒய் மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜியோ டிஜிட்டல் லைப் பலன்கள் வழங்கப்படும்.

15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கூடுதலாக 6 மாதம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img