பியூர்-பிளே கிரெடிட் கார்டு வழங்குனர்களில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான எஸ்பிஐ கார்ட் இதன் வகைகளிலேயே முதன் முதலாக விளங்கும் ஒரு மிக விரிவான ரொக்கச் சலுகைக் கிரெடிட் கார்டான ‘கேஷ்பேக் எஸ்பிஐ கார்டை’ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், வீடுகளில் அமர்ந்து கொண்டே ‘எஸ்பிஐ கார்டு ஸ்பிரிண்ட்’ (‘SBI Card SPRINT’) டிஜிட்டல் பயன்பாட்டுத் தளத்தில் ஒரு சில கிளிக்குகளை மேற்கொள்வதன் மூலம் கேஷ்பேக் எஸ்பிஐ (CASHBACK SBI) கார்டை எளிதாகப் பெறலாம்.
சிறப்புச் சலுகையாக இந்த காண் டாக்ட்லெஸ் கார்டு முதல் வருடத்தில் மார்ச் 2023 வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் வலுவான முன்மொழிவின் காரணமாக, கேஷ்பேக் எஸ்பிஐ CASHBACK SBI)கார்டு வாடிக்கையாளர் அவரது அனைத்து செலவுகளுக்கும் வரம்பற்ற வகையில் 1% கேஷ்பேக்கைப் பெறுவார்.
அத்தோடு இந்தக் கேஷ்பேக் ஒவ்வொரு மாதாந்திர அறிக்கை சுழற்சியிலும் அதிகபட்சமாக இந்திய ரூ.10,000 வரையிலான அனைத்து பிணையவழி செலவுகளுக்கும் 5% ஆக அதிகரிக்கும்.
ரொக்கச்சலுகையை ஆட்டோ-கிரெடிட் செய்வதற்கான வசதியுடன் கேஷ்பேக் எஸ்பிஐ கார்டு வருகிறது. இந்த வெளியீட்டின் போது, SBI கார்டின் மேலாண்மை இயக்குனரும் தலைமை செயல்தலைவருமான ராம மோகன ராவ் அமரா பேசுகையில், ஒவ்வொரு கொள்முதலிலும் ஒவ்வொரு முறையும் மற்றும் அனைத்து இடங்களிலும் கேஷ்பேக் பலன்களைப் பெற வகை செய்து வாடிக்கையாளர்களுக்கு உண்மை யான அதிகாரத்தை வழங்கும் கேஷ்பேக் எஸ்பிஐ (CASHBACKSBI) கார்டை வடி வமைத்துள்ளோம், என்றார்.
உள்நாட்டு விமான நிலைய வரவேற்பறையில் ஒரு வருடத்தில் 4 முறை இலவச வருகைகளை மேற்கொள்ளும் சலுகை (ஒரு காலாண்டில் 1 வருகை) ரூ.500 லிருந்து ரூ.4,000 வரை மேற் கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு 1% எரிபொருள் உபரி வரி விலக்கையும் வழங்குகிறது.
கேஷ்பேக் எஸ்பிஐ கார்டு (CASHBACK SBI Card) பயனர்கள், கார்டு உறுப்பினர்தகுதி ஆண்டில் வருடாந்திர செலவினங்கள் ரூ.2 லட்சம் என்ற மைல்கல்லை எட்டும்போது புதுப்பித்தல் கட்டணம் திரும்பப்பெறப்படுவதை அனு பவித்து மகிழலாம். கேஷ்பேக் எஸ்பிஐ கார்டு (CASHBACK SBI Card) விசா இயங்கு தளத்தில் கிடைக்கிறது.