fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் ‘பாஸோ’ அறிமுகம்

கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் ‘பாஸோ’ அறிமுகம்

கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் ‘பாஸோ’ (FASO) அறிமுக விழா கோவையில் நடந்தது. புதிய ஆடைகளின் கலெக்சன்கள் கோவை லி மெரிடியன் ஓட்டலில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

தென்னிந்திய அளவிலானசில்லறை விற் பனையாளர்கள், சந்தை விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர். கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் டாக் டர் கேபிஆர் ராமசாமி புதிய பொருளை அறிமுகப்படுத்தினார்.

நிர்வாக இயக்குனர் பி.நடராஜ், செயல் இயக்குனர்கள் சிஆர் அனந்தகிருஷ்ணன், இ.கே சக்திவேல், என். அருண் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
2022-23ம் ஆண்டுக்கான வணிக திட்ட அறிக்கையை துணைத்தலைவர் டி.கோகுலகிருஷ்ணன், ‘எதிர்காலத்தில் பயணிப்போம்’ என்ற தலைப்பில் சமர்ப் பித்தார். ஆண்டு வணிக சந்திப்பில் 2022 புதிய ஆர்டர்கள் கிடைத்தன.

புதிய உள்ளாடைகளை அறிமுகம் செய்து, கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி ராமசாமி பேசியதாவது: பாஸோ சில்லறை விற்பனை பிராண்ட் 2019-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னிந்திய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பின்னூட்டம் வயிலாக அறியப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆண்கள் உள்ளாடையில் பாஸோ இயற்கையான பருத்தி, மென்மையான வசதி மற்றும் தோலுக்கு நட்பான தன்மை போன்றவை இதன் சிறப்பம்சங்கள். இது, இந்திய உள்ளாடை சந்தையில் புதிய நிர்ணயத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு வசதியான தரமான பொருளாக இருக்கும்.

முதன்மை சேகரிப்பானது மிக முக்கியமானது. தற்காலத்துக்கு ஏற்ற வகையில் மென்மையான தன்மை, உயர் இழுதிறன் மற்றும் உயர்வான தரம், மிக துல்லியமான வடிவமைப்பு போன்றவை சிறப்பான வசதிகள் போன்றவை எங்களது தயாரிப்பின் மிக முக்கிய அம்சங்களாகும். இவ்வாறு, அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img