இந்தியாவின் முன்னணி டி2சி பிராண்ட், இயற்கையாக குழந்தைகளுக்கான தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறது சூப்பர்பாட்டம்ஸ்.
மென்மையாக குழந்தைகளை சுற்றி பாதுகாக்கும் லேசான பருத்தி இழையால் ஆனவை இவை.
காற்றோட்டமுள்ள இந்த இலேசான கச்சையானது, உள் பகுதியில் எப்போதும் உலர்ந்த உணர்வை தரும்.
குளிர்காலத்தில் இதமாகவும், வெப்ப காலத்தில் குளிச்சியான உணர்வை குழந்தைகளுக்கு அளிக்கிறது. குழந்தைகளுக்கு வசதியான உணர்வை தருகிறது.
CPSIA சான்று பெற்ற இந்த ஸ்வாடில், தீங்கிழைக்கும் சாயம், ரசாயனங்களுக்கு அப்பாற்பட்டவை. பிறந்த குழந்தைகளுக்கு எவ்வித தோல் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தாது.
பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு ஏற்ப இதன் அளவை அதிகரிக்கவோ, குறைத்துக் கொள்ளவோ முடியும்.
குழந்தைகள் வசதியாகவும், இதமாகவும் உணரும். இதன் விலை 500 ரூபாய் முதல் துவங்குகிறது.
சூப்பர் பாட்டம் இணையதளத்திலும், அமேசான், நய்க்கா, பிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி வணிக தளங்களிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு குழந்தைகள் நல கடைகளிலும் இது கிடைக்கும்.
சூப்பர்பாட்டம்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பல்லவி உத்தாகி பேசுகையில், “இந்திய தாய்மார்களின் வசதியை கருத்தில் கொண்டு, குழந்தைகள் எவ்வித சிரமும் இடர்பாடும் இல்லாமல் தூங்க வசதியான வடிவமைப்புடன் இந்த ஸ்வாடில் கச்சையை உருவாக்கியதில் பெருமையடைகிறோம்.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
பிஞ்சு குழந்தைகள் நாள் முழுவதும் மகிழ்வாக இருக்க இந்த சிறு பொருளை உருவாக்கியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.