fbpx
Homeபிற செய்திகள்குறுந்தொழில்களுக்கு வைத்த சீலை அகற்ற டேக்ட் சங்கத்தினர் கோரிக்கை

குறுந்தொழில்களுக்கு வைத்த சீலை அகற்ற டேக்ட் சங்கத்தினர் கோரிக்கை

கோவை மாநகரில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் குறுந்தொழில் முனைவோர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகர £ட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு இடையர்பாளையம் டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த இரு தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு இது போன்ற மாநகராட்சியின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த இரண்டு தொழில் கூடங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கொடுத்த நபரின் புகாரில் உண்மை இல்லை. இதுகுறித்து முறையான ஆய்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நோட்டீசுக்கும் சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்கள் பதில் அளித்து வந்துள்ள நிலையிலும் தொழில் முனைவோர் கொடுத்த எந்த நோட்டீசுக்கும் மாநகராட்சி நிர்வாகம் பதில் தராமல் இரண்டு ஆலைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வரும் 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனை வோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

எனவே சீல் வைக்க ப்பட்ட தொழில் கூடங்கள் இயங்கிட உடனடியாக அனுமதி தந்து உதவிடவும்.

மாநகராட்சி அதிகாரிகள் மாவட்ட தொழில் மையம் அதிகாரிகள் தொழில் அமைப்புகள் கொண்ட ஒரு குழுவை தாங்கள் ஏற்படுத்தி உண்மையில் அங்கு இயங்கி வந்த தொழில் கூடங்களால் பாதிப்பு உள்ளதா என்று தாங்கள் அறிக்கை பெற்று உண்மை நிலை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img