fbpx
Homeபிற செய்திகள்குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா

குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா

தொழில்நுட்ப வல்லுநர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழாவை மார்ச் 21 முதல் 23 வரை நடத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், 105க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பயிலரங்குகளுடன் மாணவர்களுக்கு அவர்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய தளத்தை குமரகுரு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றது.

மேலும் யுகம் 2024ல் என்.மகாலிங்கம் சுழற்கோப்பை, ஐசா விருதுகள், சமூக பங்களிப்பு, எக்கனோத்தான், நில அதிர்வு வடிவமைப்பு போட்டி, ட்ரெண்ட்ஸ் 24, பேப்பர் பிரசன்டேசன், சார்க் டேங்க், ஆர்சி எக்ஸ்ட்ரீம், டிபன்ஸ் கரியர் எக்ஸ்போ, கலை நிகழ்ச்சி, அங்காடி, காலநிலை கருத்தரங்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இந்த கலாச்சார தொழில்நுட்ப நிகழ்வில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img