fbpx
Homeபிற செய்திகள்குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, தேசிய மாணவர் படை (NCC) மற்றும் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை ஆகியவை இணைந்து குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

புதுடெல்லியில் நடை பெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கேபிஆர் கல்லூரி மாணவி பி.சுபா ஷினி பங்கேற்றார். என்சிசி அலுவலர் சி.கௌதம் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி தலைமை வகித்து பேசும் போது, மாணவி சிறந்து விளங்க வாழ்த்தினார். மாணவியின் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து அறிவித்தார்.

கல்லூரியின் ஆலோசகர் முனைவர் எஸ். ராமச்சந்திரன், மாணவியின் சிறந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

கேபிஆர் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி, மாணவியின் சாத னையைப் பாராட்டி, ராணுவ அதிகாரிக்கான அவரது விருப்பத்தைப் பற்றி கேட்டறிந்தார்.

கடந்த எட்டு மாதங்களாக நடந்த பல்வேறு முகாம்களில் மாணவியின் அயராத முயற்சிகளை அவரது பெற்றோர்பகிர்ந்து கொண்டனர். முகாம்களின்போது கல்லூரியின் ஆதரவு மற்றும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ததற்காக கேபிஆர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறைத் தலைவர், துணைப் பேராசிரியர் ஆர்.அஞ்சித் ராஜா நன்றி கூறினார்.

விழாவில் 120 மாணவர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img