கோவை சிட்கோ தொழிற் பேட்டை உற்பத் தியாளர்கள் நல சங்கமான கொசிமா தொழில் அமைப்பு சார்பில், கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் கிராமத்தில் “கொசிமா இண்டஸ்ட்ரியல் பார்க்” என்ற பெயரில் அமைக் கப்பட்டுவரும் தொழில் பூங்கா வளாகத்தில் தொ ழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள துவங்கியுள்ளன.
அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்க வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மக்கள் தொகை காரண மாக கோவை நகருக்குள் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும் புதிய உற்பத்தி தொழிற் சாலைகளை துவங்கவும் முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக தொழில்துறையினர் ஒன்றிணைந்து நகருக்கு வெளிப்புறங்களில் இடங்களை வாங்கி அங்கே தனியார் தொ ழிற்பேட்டைகளை அமைத்து வருகின்றனர்.
இந்த வகையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கமான (கொசிமா) தொழில் அமைப்பு சார்பில், கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் கிராமத்தில் ‘கொசிமா இண்டஸ்ட்ரியல் பார்க்‘ என்ற பெயரில் தொழில் பூங்கா ஒன்று பிரமாண்ட மாக அமைக்கப்பட்டு வரு கிறது.
இந்த தொழிற்பேட்டை யில் முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியுள்ளன.
‘கொசிமா’ தொழிற் பூங்கா’ செயல் இயக்குனர் சுருளிவேல், இயக்குனர், நல்லதம்பி ஆகியோர் கூறி யதாவது: நகர விரிவாக்கம் காரணமாக இட நெருக்கடி பிரச்சினை தொழில் துறையினருக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள் ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழில்துறையினர் 78 பேர் ஒன்றிணைந்து கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் கிராமத்தில் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்தோம்.
முதல் கட்ட மாக 42 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். மொத்தம் 140 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
உள்ளூர் திட்ட குழுமம் உள்ளிட்ட அனைத்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. எதிர்வரும் நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை கள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு அக்டோபர் முதல் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கும் என நம்புகிறோம்.
தொழிற்பேட்டை வளாகம் முழுவதும் 100% தொழில்நிறுவனங்கள் செயல்படத் துவங்கி னால், 7 ஆயிரம் தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.