காவேரிப்பட்டணத்தில் பத்தாண்டுகளாக உழவர் சந்தை செயல்படாமல் பூட்டியே கிடந்தது. பல அர சியல் காரணங்களுக்காக அதி காரிகளும் உழவர் சந்தையை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
பலமுறை பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட் டனர். அதை மீறி அதிகாரிகள் உழவர் சந்தையை திறந்தாலும் உள்ளே காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் பாலக்கோடு ரோட்டிலேயே, ரோட்டை ஆக்கிரமித்து காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அறிந்த காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் அவர்கள் வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் மாதேஷ், வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம், உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து உழவர் சந்தையை பார்வையிட்டார்.
இதுகுறித்து காவேரிபட்டி னம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் கூறும்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த அற்புதமான திட்ட மான உழவர் சந்தையை பல காரணங்களுக்காக முந்தைய பேரூராட்சித் தலைவர் அவர்கள் காவேரிப்பட்டணத்தில் இதுவரை செயல்படாமல் நிறுத்தி வைத்திருந்தார்.
எனவே உழவர் சந்தையை சீர மைத்து உழவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை காலி செய்துவிட்டு உழவர் சந்தையில் உள் கடை களை வைத்து தாங்களும் பொது மக்களும் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
அப்போது உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், பேரூராட்சி துணை தலைவர் மாலினி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நித்தியா, தமிழ்ச்செல்வி, ,கோகுல்ராஜ் ,அமுதா மற்றும் சமரசம், முன்ராஜ் ,பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.