Homeபிற செய்திகள்கார் காப்பீட்டில் ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர் பரிந்துரைப்பது ஏன்?

கார் காப்பீட்டில் ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர் பரிந்துரைப்பது ஏன்?

கார் காப்பீட்டில், ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர், டெப்ரிசியேசனின் தாக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், முழுமையான கவரேஜை உறுதி செய்கிறது.
மோட்டார் வாக னச் சட்டம் 1988ன் படி, இந்தியாவில் உள்ள அனைத்து கார் உரிமையாளர்களும் செல்லுபடியாகத்தக்க கார் காப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு விரிவான கார் காப்பீட்டுப் பாலிசியானது, எதிர்பாராத பழுது அல்லது விபத்துகளின் போது கார் உரிமையாளர்களைப் பாது காக்கும்.

டெப்ரிசியேசன் என் பது இயற்கையாக ஏற்படும் தேய்தல் மற்றும் உடைதல், வயது, பயன்பாடு மற் றும் புழக்கத்தில் இல் லாமற்போவது ஆகிய காரணங்களினால் ஏற்படும் ஒரு சொத்தின் மதிப்பிழப்பைக் குறிக்கிறது.

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங் களுக்கும் டெப்ரிசி யேசன் விகிதத்தை நிர்ண யித்துள்ளது.

காரின் வயதின் அடிப்படையில், 10 வருடத்திற்கு மேம்பட்ட பழைய வாகனங் களுக்கு ஜீரோ முதல் ஆறு மாதங்களுக்கு டெப்ரி சியேசன் 5% முதல் 50% வரை வேறுபடும்.

விபத்தின்போது, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள், விபத்து கார ணமாக பாதிக்கப்பட்ட பாகங்களின் மதிப்பிலிருந்து டெப்ரிசியேசன் மதிப்பைக் கழித்து மீதத்தை செலுத்துகின்றன.

சந்தை மதிப்பு மற்றும் டெப்ரிசியேசன் மதிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டின் இழப்பை காப்பீடு செய்தவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர் விஷயத்தில், மாற்றப் படும் காரின் சேதமடைந்த உதிரிபாகங்களுக்கான முழுத் தொகையையும், டெப்ரிசியேசன் தொகை யைக் கழிக்காமல், கார் உரிமையாளர்கள் பெறலாம்.

அதிகபட்ச கவரேஜுக்கு, ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர்-ஐ தேர்ந்தெடுப்பது பரிந்துரைக்கப் படுகிறது.உங்கள் தற்போதைய கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் கூடுதலாக ஜீரோ டெப் ரிசியேசன் ஆட்-ஆன் கவ ர்-ஐ தேர்வு செய்யலாம்.

ஜீரோ டெப்ரிசியேசன் ஆட்-ஆன் கவர் ஆனது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயது வரை யிலான கார்களுக்கு மட் டும் வழங்கப்படுகிறது. பொதுவாக பழைய கார்களுக்கு இந்த கவர் வழங்கப்படுவதில்லை.

படிக்க வேண்டும்

spot_img