தென் மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டிகள் காரியாபட்டி ஸ்ரீசபரி நேசனல் பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் பல்வேறு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில் தலைமையேற்று துவக்கி வைத்தார். காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.