fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: மடாதிபதிகள் பங்கேற்று நடத்தினர்

காங்கேயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: மடாதிபதிகள் பங்கேற்று நடத்தினர்

சூலூர் வட்டம் காங்கேயம் பாளையத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, நான்காம் கால வேள்வி மற்றும் மூலவருக்கு திருக்குட நன்னீராட்டு பெரு விழா, மாரி அம்மனின் அலங்கார சிறப்பு தரிசனங்கள் இடம்பெற்றன.மேலும் ஸ்ரீ ஆண்டாள் பஜனை குழுவினர் வழங்கும் பஜனை நிகழ்ச்சி, தேவாரத் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி கமலக்கண்ணன் ஓதுவார் மூர்த்திகள் குழுவினர் நிகழ்ச்சிகள், கோவை புகழ் அம்மன் குழுவினர் வள்ளி கும்மியாட்டம் போன்ற நிகழ்ச் சிகள் நடைபெற்றன.

நிகழ்வுகளை பழனி ஆதீ னம் தவத்திரு சாது சுவாமிகள் திரு மட மடாதிபதி திருப்பெருந்தவத்திரு சாது சண்முக அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் மருதாசல அடிகளார், சீரவை ஆதினம் கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர அடிகளார், திருநாவுக்கரசர் திருமடம் சிவாச்சல அடிகளார் ,தென்தேரி ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் இராச சரவண மாணிக்கவாசக சுவாமிகள், சுந்தரராஜ சிவாச்சாரியார் கலந்து கொண்டு நடத்தி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி. பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பீடம்பள்ளி பேரூராட்சி தலைவர் குமரவேல், கண்ணம்பாளையம் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய தலைவர் அங்கமுத்து, கலங்கல் முன்னாள் தலைவர் நடராஜன், அதிமுக கே.எஸ்.ஆர். சந்திரசேகர் மற் றும் சூலூர், பல்லடம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் ஆசி பெற்றனர்.

சிறப்பு அம்சமாக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை தொடர்ந்து திருக்கோவில் மண்டல வழிபாடு 48 நாட்கள் நாள்தோறும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் கே.எம்.சுப்பிரமணியம், கே.சின்னசாமி, எஸ்.கணேசன், ஆர்.செல் வராஜ், ராமசாமி, பி.வெங்கடேசன், வி.பழனிச்சாமி, சின்னசாமி, ரஞ்சித் குமார், வேலுச்சாமி (மிலிட்டரி) மற்றும் காங்கேயம்பாளையம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img