கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே நாட்டுத்துப்பாக் கிகள், தோட்டாக்களுடன் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி வனச் சரகம் கல்லாவி பிரிவு, நொச்சிப்பட்டி பீட் பகுதியில் வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் அங் குரதன், முருகன், வன காவலர் பூபதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.
அப்போது கருவானூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 2 பேர் இரவு 11.30 மணி அளவில் வந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர் களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளும், துப்பாக்கிக்கு தேவையான வெடி மருந்து, தோட் டாக்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூர் அருகே உள்ள திருவனப்பட்டி அடுத்த பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ(32), ஊத் தங்கரை தாலுகா கல் லாவி அருகே உள்ள கழுதப்பட்டியை சேர்ந்த தங்கராஜ்(28) என தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக் கள், வெடி மருந்துகள், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணையில் அவர் கள் வனப்பகுதியில் மான் வேட்டைக்காக சென்றது தெரியவந்தது.
அவர்கள் மீது வன உயிரின குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.