சர்வதேச மகளிர் தினவிழாவை யொட்டி, கோவை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து, உள்ளாட்சியில் சாதனை படைத்து வரும் கோவை மாநகராட்சி மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, தனலட்சுமி, தெய் வானை தமிழ்மறை, புஸ்பலதா ராஜகோபால் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் சாதனை படைத்த பெண்களுக்கு, கல்லூயின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி விருதுகள் வழங்கினார்.
“சர்வதேச மகளிர் தினவிழா என்பது கொண்டாடுவதற்காக பெறப்பட்டது இல்லை. இந்த நாளை போராடி பெற்றுள்ளோம். பெண்கள் என்பவர்கள் ஆண் களுக்கு சமமானவர்கள் மட்டுமல்ல சாதனை படைக்க பிறந்தவர்கள் என பெண்களுக்கு விழிப்புணர்வையும், சமுதாயத்தில் அனைத்து துறைகள் மட்டுமல்ல, அரசியலிலும் சாதனை படைக்க வேண்டும்” என சிறப்பு விருந்தினர்களாக வந்த பெண்கள் நம்பிகை ஊட்டினர்.
இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளுடன், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் நடனம் ஆடி அசத்தினர்.