Homeபிற செய்திகள்கலைஞர் கருணாநிதி 99வது பிறந்தநாள் விழா: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கிய முகாமில் 300 பேர் இன்று...

கலைஞர் கருணாநிதி 99வது பிறந்தநாள் விழா: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கிய முகாமில் 300 பேர் இன்று ரத்ததானம்

கலைஞர் கருணாந்தி 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று (11ம் தேதி) கோவை பீளமேடு, எஸ்ஸோ பங்க் அருகில் உள்ள, சுகுணா திருமண மண்டபத்தில், “தளபதி ரத்ததான இயக்கம்“ சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் அளித்தனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டக் கழக பொறுப் பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ) வர வேற்றுப் பேசினார். பகுதி பொறுப்பாளர்கள் வே. பாலசுப்பிரமணியம், மா. நாகராஜ், இரா. சேரலாதன், எஸ். எம். சாமி , சிங்கை மு.சிவா, சேக் அப்துல்லா, ஆர். எம். சேதுராமன்,ப. பசுபதி, மார்க்கெட் மனோகரன்,வி.ஐ. பத்ரூதீன், 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், 27 வது வட்டக்கழக பொறுப்பாளர் சபரி தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கலைஞர் கருணா நிதி திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர். நிர்மலா மற்றும் அரசு மருத்துவமனை மருத்து வக்குழுவினர் ரத்ததானம் பெறும் நிகழ்வுகளில் பங்கேற்ற னர்.

இந்த விழாவில், கழக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கிருஷ்ணன்,சட்டத் துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்ட பாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண் ணப்பன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர், மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் மு.முத்து சாமி, மாநில தீர்மானக்குழு மு.இரா. செல்வராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, ராஜரா ஜேஸ்வரி, முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல் மணி, பி. நாச்சிமுத்து, சு. பார்த்தசாரதி, வெ.ந. உதயகுமார், கோவை சம்பத், வழக்கறிஞர் பி. ஆர். அருள்மொழி, கோட்டை அப்பாஸ், ஆ. கண்ணன், பா.ஆனந்தன், பி.மாரிசெல்வன், மு.க.உமாமகேஸ்வரி, மா.செல்வராஜ், குப்பனூர் பழனிச்சாமி, சிங்கை பிரபாகரன், வி.லட்சுமணன்,கே. மனோகரன் , கே. வெங்கடேஷ்வரன், இலா.தேவசீலன், சி. ஆர். கனிமொழி, கல்பனா செந்தில், கே. ஆர். ராஜா, சக்தி நகர் சீனிவாசன்,நா. கனகராசு, ஆர். மணிகண்டன்,காட்டூர் வேலு, சின்னசாமி , ஆறுஸ்(எ) ஆறுமுகம், சாரமேடு ஏ. இஸ்மாயில், சிங்கை பிரபாகரன் , சுந்தர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் , கோவை மாநகராட்சி கணக்குகள் குழுத் தலைவர் தீபா தளபதி இளங்கோ, வட்டக்கழக பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள், நகர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற் றனர். விழா முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா. தனபால் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img