கலசலிங்கம் பல்கலையில் 38-வது பேட்ச் பி.டெக் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான பத்து நாள் புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடந்தது.
பல்கலை. வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமை தாங்கி பேசும்போது, கலசலிங்கம் பல்கலையில், மாணவர்களுக்கு கம்பெனி வேலைவாய்ப்பு, பேராசிரியர் பணிக்கு வேலை, சுயதொழிலில் ஈடுபட பயிற்சி, இங்கு இரண்டு வருடம் படிப்பு, இரண்டு வருடம் அமெரிக்க டொலடோ பல்கலையில் வேலையுடன் படிப்பு என்று பல வாய்ப்புகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி வெற்றி பெறமுடியும் என்றார்.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், பத்தாக்கபயிற்சிகளை துவக்கி வைத்தார். பதிவாளர் வி.வாசுதேவன், அனைத்துத் துறை இயக்குனர்கள், டீன்கள், தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.
முதலாமாண்டு துறை டீன் ரஜினி, பத்து நாள் பயிற்சிகளை விவரித்தார்.
சிறப்பு விருந்தினர், பெங்களூரு ஜார்ஜ்பீ கம்பெனி மூத்த இயக்குனர் சுவாமிநாதன் ஜெயசந்திரன் பேசுகையில், மாணவர்கள், சகல மாணவர்கள், மூத்த மாணவர்களுடன் நட்பு வட்டத்தை பெரிதாக்கி அனுபவங்களைப் பகிர்ந்து கற்க வேண்டும் என்றார்.
ஹைதராபாத், ஸபி ஷேக் ஷபுல்லா, விஷாலினி ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர்.
மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.