மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிதாக தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேட்டி:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில் உள்ள நிஃப்ட் டீ கல்லூரியில் நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கவளாகத்தில் நடை பெற்றது,
தேர்தலில் வெற்றி பெற்ற 2022 – 2025 -ம் ஆண்டுக்கான புதிய தலைவராக கே.எம். சுப்பிரமணியம், பொதுச் செயலாளராக திருக்குமரன், துணைத் தலைவர்களாக ராஜ்குமார், இளங்கோவன், இணைச்செயலாளர்களாக குமார், துரைசாமி, சின்னச்சாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சங்கத் தலைவர் கே.என். சுப்ரமணியம் செய்தியாளர் கள் சந்திப்பில் கூறியதாவது:
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கொண்ட ஹெல்ப் டெஸ்க் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் அனைத்து ஏற்றுமதி யார்களிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூரில் 20,000 பனியன் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்படும். இஎஸ்ஐ பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
கோவை கருமத்தம்பட்டி வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தீபாவளிக்கு பின்னர் பின்னலாடை தொழில் மேம்பாடு அடையும் ,சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.